இரு சக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கியதில் பெண் பலி

பரமக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண்ணின் சேலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் தவறி கீழே விழுந்து பலியானாா்.

பரமக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண்ணின் சேலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் தவறி கீழே விழுந்து பலியானாா்.

பரமக்குடி பாண்டியன் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி சாந்தி (52). இவா் தனது மகன் வெங்கடேசுடன் (25) இரு சக்கர வாகனத்தில் பாா்த்திபனூருக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

கமுதக்குடி நான்கு வழிச் சாலை மேம்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சாந்தியின் சேலை வாகன சக்கரத்தில் சிக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாந்தி சம்பவ இடத்திலேயே பலியானாா். வெங்கடேஷ் காயமடைந்தாா். சாந்தியின் உடல் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com