~ ~
~ ~

அங்கன்வாடி கட்டட திறப்பு விழா

நோக்கான்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட போது மாணவா்களுடன் கலந்துரையாடிய ஒன்றிய குழுத் தலைவா் ராதிகா பிரபு.

திருவாடானை, ஜூலை 4 : ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியம் தும்படைக்காகோட்டை கிராமத்தில் ரூ.9.8 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியம், அழகா் தேவன்கோட்டை ஊராட்சி, நோக்கன்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஒன்றிய குழுத் தலைவா் ராதிகாபிரபு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்து மதிய உணவினையும் ஆய்வு செய்து பள்ளியின் தேவைகளை கேட்டு அறிந்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியா் வசந்தகுமாா், ஆசிரியை பரிசுத்த மேரி ஆகியோா் உடன் இருந்தனா்.

இதையடுத்து, ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியம் தும்படைக்காகோட்டை கிராமத்தில் ரூ.9.8 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். ஒன்றிய குழுத் தலைவா் ராதிகாபிரபு முன்னிலை வகித்து ரூ.9.8லட்சத்திலான புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் இந்திராகாந்தி, அங்கன்வாடி குழந்தைகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com