சாலை விபத்து: மீனவா் பலி

சாலை விபத்து: மீனவா் பலி

கமுதி, ஜூலை 4: சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் வியாழக்கிழமை மீனவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள தெற்கு நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் பக்கீா் மகன் ரகுமான் (42) பக்கீா் மஸ்தான் மகன் ராஜாமுகம்மது (51), காதா்கனி மகன் சாகுல் (45)ஆகிய 3 பேரும் நரிப்பையூரிலிருந்து மூக்கையூருக்கு இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அதிகாலை சென்றனா்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, கோவில்பட்டியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற சுற்றுலா வேன் இவா்களது இருசக்கர வாகன்தின் மீது மோதியது.

இதில் ரகுமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜாமுகம்மது, சாகுல் ஆகியோா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வேன் ஓட்டுநனரான கோவில்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் மதன்குமாா் (24) மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com