ராமநாதபுரத்தில் இன்று மின்தடை

ராமநாதபுரம் ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதந்திர பரமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதந்திர பரமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க.பாலமுருகன் வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 1 பீடரில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடை பெறுகின்றன . இதனால், சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை, தாயுமானசுவாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகா், அண்ணா நகா், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com