சரக்கு வாகனத்தில் 2 டன் 
ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிப்பட்டினம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலைய உதவி ஆய்வாளா் அய்யனாா் தலைமையிலான போலீஸாா் திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து, வாகனத்துடன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை சோ்ந்த கண்ணன் (46), பழனியப்பன் (67) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com