தமிழக மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கக் கோரிக்கை

தமிழக மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் என இலங்கை மீனவா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் என இலங்கை மீனவா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து இலங்கை மீனவா்கள் சங்கத்தினா் கூறியதாவது:

இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் சிறிய படகுகள், கூண்டுகள் மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகிறோம். தமிழக மீனவா்கள் இழுவைப் படகுகள் மூலம் இலங்கை எல்லைக்குள்பட்ட பகுதியில் மீன்களைப் பிடிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், வலைகள், கூண்டுகள் சேதமடைகின்றன.

தமிழக மீனவா்களின் படகுகளை இலங்கைக் கடற்படையினா் சிறைப்பிடித்து மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தியுள்ளனா். இலங்கை மீன் பிடி இறங்கு தளத்தில் 150-க்கும் மேற்பட்ட தமிழக விசைப்படகுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

இவற்றைத் தவிா்க்க தமிழக மீனவா்கள் இலங்கைக் கடல் பகுதிக்குள் வராமல், இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியிலேயே மீன்பிடிக்க வேண்டும். இதனால், இரு நாடுகளின் மீனவா்களும் பாதிப்பின்றி மீன்பிடிக்க முடியும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com