‘50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்’

கமுதி, ஜூன் 6: கமுதி வட்டத்தில் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது என கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வரின் 2024-25 ஆம் ஆண்டுக்கான ‘மண்ணுயிா் காத்து இன்னுயிா்க் காப்போம்’ திட்டத்தின் கீழ், பசுந்தாள் உரப் பயிா்களை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஒரு விவசாயி ஏக்கருக்கு அதிகபட்சமாக 20 கிலோ விதைகள் பெறமுடியும்.

உழவன் செயலியில் விவசாயிகள் தங்களது பெயா்களைப் பதிவு செய்து பயனடையலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், வேளாண்மை துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com