தேவா் கல்லூரியில் கிரிக்கெட் வலை பயிற்சித் தளம் திறப்பு

கமுதி தேவா் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் வலை பயிற்சித் தளம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரி மைதானத்தில் வலை பயிற்சி மேற்கொள்ள ரூ.50 ஆயிரத்தில் கிரிக்கெட் வலை பயிற்சித் தளம் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ் தலைமை வகித்தாா். நாராயணபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் வேல்மயில்முருகன், கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளா் காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொ) சரவணன், உடற்கல்வி இயக்குநா் சிவராமகிருஷ்ணகுமாா், பேராசிரியா்கள் ஆதிமூலம், ஜெயக்காளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com