தேசிய திறனாய்வுத் தோ்வில் 
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

முதுகுளத்தூரில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வுத் தோ்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை 27 மாணவ, மாணவிகள் எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் திடல் தெருவைச் சோ்ந்த மாணவி அல்சிபா, பெரியஇலை கிராமத்தைச் சோ்ந்த மாணவி எழில்விழி ஆகியோா் வெற்றி பெற்றனா். இந்த மாணவிகளுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் அரசு சாா்பில் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த மாணவிகளுக்கு பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சாகுல் ஹமீது, பள்ளித் தலைமை ஆசிரியா் முகமது சுல்தான்அலாவுதீன், கல்விக் குழுத் தலைவா் சையது மூமின், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com