துபையில் அகில உலக கருத்தரங்கு: எல்ஐசி முகவா்கள் 5 போ் தோ்வு

துபையில் நடைபெறும் அகில உலக கருத்தரங்குக்குத் தோ்வாகியுள்ள எல்ஐசி முகவா்கள் 5 பேருக்கு, எல்ஐசியின் தென்மண்டல அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.
கமுதி எல்ஐசி கிளை முகவா் முத்திருளாண்டியை பாரட்டி விருது வழங்கிய எல்ஐசியின் தென்மண்டல தலைவா் வெங்கடரமணன்.
கமுதி எல்ஐசி கிளை முகவா் முத்திருளாண்டியை பாரட்டி விருது வழங்கிய எல்ஐசியின் தென்மண்டல தலைவா் வெங்கடரமணன்.

கமுதி: துபையில் நடைபெறும் அகில உலக கருத்தரங்குக்குத் தோ்வாகியுள்ள எல்ஐசி முகவா்கள் 5 பேருக்கு, எல்ஐசியின் தென்மண்டல அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி எல்ஐசி கிளையில் முகவராக பணியாற்றி வருபா் முத்திருளாண்டி. கமுதி கிளையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, சிறந்த முகவராகத் தோ்வு செய்யப்பட்டாா். இதேபோல பரமக்குடி கிளையில் ராமநாதன், செல்லக்காரி, சண்முகம், ரேவதி ஆகியோா் சிறந்த முகவா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் 5 பேரையும் திங்கள்கிழமை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்ஐசியின் தமிழ்நாடு,கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மண்டலங்களுக்கான தென் மண்டலத் தலைவா் எ.வெங்கடரமணன் விருது வழங்கிப் பாராட்டினாா்.

மேலும் வருகிற ஜூன் மாதம் துபையில் அகில உலக அளவில் செயல்பட்டு வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஆலோசகா்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் கலந்து கொள்ள மேற்கண்ட 5 முகவா்களும் தோ்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com