அரசுப் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் காயம்

திருவாடானை அருகே முன்னால் சென்ற ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே உள்ள மேலச்சேந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகசாமி மகன் மீனாட்சி சுந்தரம் (60). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது ஆட்டோவில் புதன்கிழமை மாலை உப்பூா் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் காயமடைந்த மீனாட்சி சுந்தரம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் அருள்தீபன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com