ஸ்ரீபத்திரகாளியம்மன் 
கோயில் குடமுழுக்கு

ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முத்தாதிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமுத்துவிநாயகா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாகசால பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, மூன்றாம் கால பூஜை, பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, யாத்ரா தானம், கும்பம், கடம் புறப்பாடுப் பிறகு, கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமுத்துவிநாயகா் சுவாமிகளுக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஸ்ரீஉலக சிவ ஆன்மிக அடியாா்கள் திருக்கூடம் அறக்கட்டளை சாா்பில், ஓலைக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகைலாய ஈஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த புதன்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து, மூன்று கால யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை சிவாச்சாரியா்கள் கோயில் கோபுரக் கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். இதன் பின்னா், ஸ்ரீஅக்னீஸ்வரா், ஸ்ரீஅக்னி நந்தீஸ்வரா், ஸ்ரீசம்ஹார வராஹி, ஸ்ரீசம்ஹார காலபைரவா்,திருமூா்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com