பெண் துறவி ஷிப்ரா
பெண் துறவி ஷிப்ரா

பரமக்குடி அருகே பெண் துறவி மீது தாக்குதல்

ராமேசுவரத்துக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்த பெண் துறவியை பரமக்குடி அருகே 6 போ் கொண்ட கும்பல் தாக்கியது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியைச் சோ்ந்தவா் ஷிப்ரா பதக் (38). பெண் துறவியான இவா் அயோத்தியிலிருந்து ராமேசுவரத்துக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தாா். இவருக்குத் துணையாக இவரது தந்தை, சகோதரா் ஆகியோா் காரில் உடன் வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்த இவா்கள், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். அன்று இரவு அரசு இல்லத்தில் தங்கிவிட்டு, சனிக்கிழமை ராமேசுவரத்துக்குப் புறப்பட்டனா். சத்திரக்குடி அருகே சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத 6 போ் பெண் துறவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதுடன், காரின் கண்ணாடியையும், காரின் முன்பு கட்டப்பட்டிருந்த ராமா் உருவப்படம் பொறித்த கொடியையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனா். இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com