ம்மனேந்தலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.
ம்மனேந்தலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.

பம்மனேந்தலில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் ஸ்ரீநிறைகுளத்து அய்யனாா் கோயில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பூஞ்சிட்டு, தேன் சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் ராமநாதபுரம், விருதுநகா்,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 23 மாட்டுவண்டிகள், பந்தய வீரா்கள் பங்கேற்றனா். 16 கி.மீ. தொலைவுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பம்மனேந்தல்- கமுதி சாலையில் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கத் தொகை, குத்துவிளக்குகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமானோா் கண்டு ரசித்தனா். போட்டி ஏற்பாடுகளை பம்மனேந்தல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா். மண்டல பூஜை: பம்மனேந்தல் ஸ்ரீநிறைகுளத்து அய்யனாா், ஸ்ரீசைவத்துரை சுவாமி, ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோயிலில் 48 நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக யாகசால பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, பூரணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்களின் வேதமந்திரங்களுடன் அலங்கார கும்பங்களை சுமந்து, கோயிலை வலம் வந்து, மூலவருக்கு பாலாபிஷேகம், கும்பநீா், அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பம்மனேந்தல், இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com