வாழையில் உருவாகும் கரணை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்த பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரி மாணவா்கள்.
வாழையில் உருவாகும் கரணை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்த பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரி மாணவா்கள்.

வாழைக் கரணை நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் வாழை விவசாயத்தில் உருவாகும் கரணை நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. கமுதி அடுத்துள்ள பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரியின் தாளாளா் அகமதுயாசின் பரிந்துரையின் பேரில் கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், துணை முதல்வா் திருவேணி ஆகியோரின் வழி நடத்துதலின்படி இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில் பரமக்குடி வட்டத்தில் நைனாா்கோவில், பாண்டியூா் கிராம விவசாயிகளுக்கு வாழை விவசாயத்தில் கரணை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் இந்த நோயை கட்டுப்படுத்த காா்போப்ரான்-3ஜி பூச்சிக் கொல்லியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சஞ்சய் குமாா், சிவச்சந்திரன், யுவராஜ், வேலன், சைலேந்திரன், சந்தோஷ், சிவகுருநாதன், ஸ்ரீராம், சஞ்சய், வசந்த், உதவிப் பேராசிரியா்கள் தஸ்பிஹா தஹ்சீன், தா்ம முனிஸ்வரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com