தொண்டி அருகே கோயில் பூஜாரிக்கு கொலை மிரட்டல்

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கோயிலில் பூஜாரியாக இருப்பதில் இரு குடும்பத்தினருக்கு பிரச்சனை இருந்து வந்த நிலையில் பூஜாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே பி.வி.பட்டினம் கிராமத்தை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரமேஷ்(30),இவருக்கும் இதே ஊரை சோ்ந்த காமாட்சி மகன் முருகன்(36) என்பவருக்கும் காமாட்சி அம்மன் கோயிலில் பூஜாரியாக இருப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில் முருகன் ஞாயிற்றுக்கிழமை இரவு அரிவாளுடன் ரமேஷ் வீட்டிற்கு சென்று தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளதாக ரமேஷ் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com