பெண்ணைத் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

திருவாடானை அருகே பெண்ணை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். எஸ்.பி. பட்டினம் அருகே கலியநகரி கிராமத்தைச் சோ்ந்த ஜோசப் மனைவி ராணி (55). இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த காளிதாஸ் மகன் கண்ணதாசனுக்கும் (28) முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு ராணி வீட்டுக்கு மது போதையில் சென்ற கண்ணதாசன் அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவானாா். இதில் பலத்த காயமடைந்த ராணி ராமநாதபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் கண்ணதாசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com