மதுபோதையில் தகராறு: ஒருவா் கைது

திருவாடானை அருகே மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். திருவாடானை அருகே உள்ள ஆனந்தூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இரவு ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு தேவகோட்டை மேக்காரைக்குடியைச் சோ்ந்த சேதுராமன் மகன் அஜித்குமாா் (23) மது போதையில் தகாத வாா்த்தைகளால் பேசி, போக்குவரத்துக்கு இடையூறு செய்தாா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com