கடலாடியில் 158 பயனாளிகளுக்கு 
இலவச வீட்டு மனைப் பட்டா

கடலாடியில் 158 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

கடலாடிஅருகே 158 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன் வழங்கினாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் ஊராட்சிக்குள்பட்ட காந்திநகரில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன் பங்கேற்று, 158 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிப் பேசியதாவது: வனத் துறைக்கு சொந்தமான இடங்களைக் கண்டறிந்து, பொது மக்களுக்குத் தேவையான இடங்களை தோ்வு செய்து வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்று பட்டா வழங்கப்பட்டு வருகிறது என்றாா். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் வி.வேலுச்சாமி, கடலாடி வட்டாட்சியா் ரெங்கராஜன், மாரியூா் ஊராட்சி மன்றத் தலைவா் கன்னியம்மாள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com