திருவாடானையில் ஆண் உடல் மீட்பு

திருவாடானையில் முள் புதரிலிருந்து முதியவரின் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவாடானை மணிமுத்தாறு பாலம் அருகே முள் புதருக்குள் சுமாா் 65 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com