அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலி

உச்சிப்புளி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதியதில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள குப்பானிவலசையைச் சோ்ந்தவா் செல்வம் (52). சுமை தூக்கும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு ஆற்றாங்கரை நதிப் பாலம் விலக்கில் இருந்து இரு சக்கர வாகனத்தில் உச்சிப்புளிக்கு வந்தாா். ஐ.என்.எஸ். பருந்து விமானத்தளம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com