ஏா்வாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல்

கமுதி: ஏா்வாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சோ்ந்தவா் ராஜா பொ்னான்ட் மகன் ஷியாம் பிரகாஷ். இவா் ஏா்வாடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தனது நகையை திருப்புவதற்காக ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஏா்வாடிக்குச் சென்ா கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரும், தோ்தல் பறக்கும்படை அதிகாரியுமான ஜெய் ஆனந்த் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்ச வழியாக வந்த காரை சோதனையிட்டனா். அப்போது உரிய ஆவனங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்தை ஷியாம் பிரகாஷிடமிருந்து பறிமுதல் செய்து முதுகுளத்தூா் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனா். மேலும் ரூ.5 லட்சத்துக்கான உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஷியாம் பிரகாஷ்க்கு அறிவுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com