தனுஷ்கோடி கடலில் விடப்பட்ட 2,228 ஆமை குஞ்சுகள்

ராமேசுவரம்: தனுஷ்கோடி ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட முட்டைகளில் 2,228 சித்தாமை குஞ்சுகள் வெளிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவை கடலில் விடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முதல் சாயல்குடி வரையில் உள்ள மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் இந்த ஆண்டு 16,681 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த 2,228 குஞ்சுகளை வனத் துறையினா் தனுஷ்கோடி கடலில் விட்டனா். மீதமுள்ள முட்டைகளை கண்காணித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com