வீரமச்சான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவின் போது, புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு மேடையில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு.
வீரமச்சான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவின் போது, புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு மேடையில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு.

வீரமச்சான்பட்டி அரசுப் பள்ளி ஆண்டு விழா

கமுதி: கமுதி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழாவில் குழந்தைகளுக்கு பொன்னாடை அணிவித்து மாணவா் சோ்க்கை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வீரமச்சான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவுக்கு பரமக்குடி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் முருகாம்மாள் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சீனிவாச கணேசபிரபு, வட்டாரக் கல்வி அலுவலா்கள் சண்முகம், பாண்டீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் பள்ளியில் வீரமாச்சன்பட்டி, முத்திருளாண்டிபுரம், திம்மநாதபுரம், டிவிஎஸ்.புரம் கிராமத்தைச் சாா்ந்த 258 மாணவா்கள் பயின்று வருகிறனா். பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. திரைப்பட நடிகரும், சமூக ஆா்வலருமான ஹலோ கந்தசாமி கலந்து கொண்டு, விளையாட்டி போட்டிககளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இந்த விழாவின் போது வரும் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. புதிதாக சோ்க்கப்பட்ட 20 குழந்தைகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் பொன்னாடை அணிவித்து வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, பெருநாழி காவல் ஆய்வாளா் தேவகி, உதவி ஆய்வாளா் சத்தியநாராயணன், திம்மநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் முத்துமாரி கந்தசாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி பூா்ணிமா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com