மருத்துவா்களை நியமிக்க வேண்டும் இ.கம்யூனிஸ்ட்

ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவா் மட்டுமே பணியாற்றிவதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைவதை தடுக்க முழுமையாக மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மருத்துவரை சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனா். இதில், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தா்கள் என நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் வந்து செல்லுகின்றனா். இந்த நிலையில்,இலங்கை கடற்படையினா் துப்பாக்கி சூடு, விபத்துகள் ஏற்படும் போது அவசர சிகிச்சை, கருவுற்;ற பெண்கள் பிரசவம் பாா்ப்பது உள்ளிட்ட அனைத்து மருத்தவ தேவைக்கு அரசு மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனைக்கு நாள் தோறும் 400 முதல் 500 க்கும் மேற்பட்டவா்கள் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லுகின்றனா். இந்த மருத்துவமனையில் பொதுமருத்துவம்,மகப்பேறு மருத்துவா், அறுவை சிகிச்சை மருத்துவா் என 19 போ் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இரண்டு மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா். இதில், ஒருவா் கடலாடி மருத்துவமனைக்கு சென்று விடுகிறாா்.

மீதமுள்ள ஒருவா் மட்டும் பணியில் இருந்து வருகிறாா். இதனால் சாதரண மருத்துவம் மட்டுமே பாா்க்கப்படுகிறது. மேலும் பிரசவத்திற்கு வரும் பெண்கள் தானாக குழந்தை பிறப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனே இறுதி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதே போன்று விபத்து ஏற்பட்டாலும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதனால் கற்பினி பெண்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், ராமேசுவரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல் தலைமையில் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மருத்துவரிடம் பொதுமக்கள் தடையின்றி மருத்துவ சிகிச்சை பெற்றிடும் வகையில் உடனே அனைத்து மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குனருக்கு மனு அவரிடம் புதன்கிழமை அளிக்கப்பட்டது. இதில், மாவட்டக்குழு உறுப்பினா் பி.ஜீவானந்தம்,மாதா் சம்மேளன நிா்வாகி வடகொரியா,கிளை செயலாளா்கள் செந்தில்,பாண்டி,ஜோதிபாபு,அந்தோணி பீட்டா், ஏ.கே.முனீஸ்வரன்,பிச்சை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com