அரிவாளுடன் சுற்றித் திரிந்த 7 இளைஞா்கள் கைது

ராமநாதபுரம் - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 7 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்குளம் பகுதியில் தனியாக வரும் நபா்கள், இரு சக்கர வாகனங்களில் வருபவா்களை சிலா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம், கைப்பேசிகளைப் பறித்துச் செல்வதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ஜெயராஜ் (24), சஞ்சய் (17), முகிலன் (22), அஜய் (எ) அசோக் (20), அழகா்(17), உதயகண்ணன் (19) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com