ஆரம்ப சுகாதார நிலையத்தில் 
தீத் தடுப்பு ஒத்திகை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத் தடுப்பு ஒத்திகை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு சாயல்குடி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் அ.முத்து தலைமை வகித்தாா். இதில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு தீத் தடுப்பு ஒத்திகைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருள்களில் எவ்வாறு தீத் தடுப்பு பணிகளை மேற்கொள்வது, எரிவாயு உருளை, மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்து, முதலுதவி சிகிச்சை, பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com