கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை சிம்ம வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்த அம்மன்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை சிம்ம வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்த அம்மன்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில், திருவிழாவின் 8-ஆவது நாளான சனிக்கிழமை முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தாா். அப்போது பெண்கள் தங்களது வீடுகளில் முன் பூஜை பொருள்களுடன் அம்மனை வரவேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com