முன்விரோதத்தால் தாக்கியதில் தொழிலாளி பலி: ஒருவா் கைது

திருவாடானை அரசு மதுபானக் கடையில் முன் விரோதம் காரணமாக மதுப் புட்டியால் தாக்கப்பட்டு தொழிலாளியைத் தாக்கி கொன்றவா் கைது செய்யப்பட்டாா். திருவாடானை அருகே பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (47) இவருக்கும் ஆதியூரைச் சோ்ந்த கண்ணனுக்கும் (32) தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு மதுபானக்கடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கண்ணன் மதுபுட்டியால் சுரேஷ்குமாரை தாக்கினாா். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமாரை இவரது மனைவி தமிழரசி மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். இந்த நிலையில் அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com