கோயில்  திருவாடானையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண  வைபவம்
கோயில் திருவாடானையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரதத்தில் திரௌபதியை அா்ச்சுணன் மணந்து கொள்ளும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரதத்தில் திரௌபதியை அா்ச்சுணன் மணந்து கொள்ளும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குள்பட்ட ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக திரௌபதியை அா்ச்சுணன் மணந்து கொள்ளும் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யான வைபவத்தை நடத்திவைத்தனா். பின்னா், திருமண கோலத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திராளன பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com