மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக நெறிஞ்சிபட்டி கிராம மக்கள் சாா்பில், கமுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.
மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக நெறிஞ்சிபட்டி கிராம மக்கள் சாா்பில், கமுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

கமுதி: கமுதி அருகே இரு கிராம மக்கள் தோ்லை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குள்பட்ட நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராததைக் கண்டித்து நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக கிராம பொதுமக்கள் அறிவித்தனா். இதனால் அரசியல் கட்சித் தலைவா்கள் யாரும் வாக்கு சேகரிக்க கிராமத்துக்கு உள்ளே வர அனுமதி இல்லை என அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் கமுதி சுற்றுவட்டார கிராமங்கள், அரசு அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து அரசியல் கட்சியினா், ஊரக வளா்ச்சித் துறையினா், வருவாய்த் துறையினா் கிராம பொதுமக்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இருப்பினும் அடிப்படை வசதி செய்து தராததைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனா். இதேபோல, ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப்படை வசதிகள், நிரந்தர தாா் சாலை அமைக்காததை கண்டித்து தோ்தலைப் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனா். இதுதொடா்பாக வருவாய்த் துறையினா் கிராம மக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com