முதுகுளத்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற ரத ஊா்வலம்.
முதுகுளத்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரத ஊா்வலம்.

சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா ரத ஊா்வலம்

முதுகுளத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, பால்குடம், ரத ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கமுதி: முதுகுளத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, பால்குடம், ரத ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் முதுகுளத்தூா் விநாயகா் கோயிலிலிருந்து பேருந்து நிலையம் வழியாக சுப்பிரமணிய சுவாமி கோயில் வரை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இதையடுத்து, மூலவருக்கு பால், பன்னீா், சந்தனம், நெய் உள்ளிட்ட 21 வகை அபிஷேக பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதையடுத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுநத்தருளிய சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி வழக்குரைஞா் கோவிந்தராமு விழா குழுவினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com