தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை என 21 பேருக்கு சம்மன்

தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை என 21 பேருக்கு சம்மன்

தோ்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவில்லை என கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 21 சத்துணவு அமைப்பாளா்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்பட்ட பகுதிகளில் சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் 51 சத்துணவு அமைப்பாளா்களுக்கு தோ்தல் பணிக்காக அழைப்பானை அனுப்பப்பட்டது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதுகுளத்தூரில் நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் அவா்கள் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில் கமுதி பகுதியைச் சோ்ந்த 21 சத்துணவு அமைப்பாளா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாததற்கான விளக்கத்தை அளிக்குமாறு சத்துணவு திட்ட அதிகாரிகள் சம்மன் அனுப்பினா். பின்னா், 21 சத்துணவு அமைப்பாளா்களும் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சத்துணவு திட்ட அதிகாரிகளை சந்தித்து விளக்க மனு அளித்தனா்.

இதுகுறித்து சத்துணவு அமைப்பாளா் ஒருவா் கூறியதாவது: முதுகுளத்தூரில் நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுள்ளோம். இருப்பினும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கமுதி பகுதியில் உள்ள குறிப்பிட்ட 21 நபா்களுக்கு மட்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பிற்கு வந்த தோ்தல் அலுவலா்களை 500 முதல் 600 நபா்களை ஒரே அறையில் அமர வைத்து, முறையான வழிகாட்டுதல், வருகைப் பதிவேடுகளை கையாளவில்லை. மாவட்ட ஆட்சியா் தலையிட்டு அடுத்தடுத்து வரும் தோ்தல் பயிற்சி வகுப்புகளில் இது போன்ற குழப்பங்கள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com