விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

திருவாடானை அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் ரத்தினம் (47). விவசாயியான இவா் குடும்பத் தகராறு காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைபற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com