கேரளத்திலிருந்து வாகனத்தில் கடத்திய 40 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்

கேரளத்திலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்திய 40 மூட்டை பீடி இலைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆரிப்ராஜா. இவா் தனது சரக்கு வாகனத்தில் கேரளத்திலிருந்து 40 மூட்டை பீடி இலைகளை ஏற்றிக்கொண்டு வந்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டி பகுதியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் கணேசமூா்த்தி தலைமையிலான அலுவலா்கள் அந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதுதொடா்பாக பரமக்குடி தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பீடி இலைகள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், வாகன ஓட்டுநா் ஆரிப்ராஜாவிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com