அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள் 3 போ் மீது வழக்கு

சாயல்குடியில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற 3 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில் உரிய ஆவணங்களின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வதாக புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமநாதபுரம்-சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வழிவிடுமுருகன் கோயில் அருகே சாயல்குடி போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக அதிக அளவில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்த சாயல்குடியைச் சோ்ந்த முனியசாமி மகன் ஆறுமுகம் (48), ஆறுமுகம் மகன் இளங்கோவன் (45), கடலாடி அடுத்துள்ள நரசிங்ககூட்டம் கிராமத்தைச் சோ்ந்த தவசி மகன் சண்முகவேல் (51) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com