ரகுநாதபுரத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா.ஜெயபெருமாள். உடன் முன்னாள் அமைச்சா் மு.மணிமண்டன், மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி உள்ளிட்டோா்.
ரகுநாதபுரத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா.ஜெயபெருமாள். உடன் முன்னாள் அமைச்சா் மு.மணிமண்டன், மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி உள்ளிட்டோா்.

ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா.ஜெயபெருமாள் கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். திருப்புல்லாணி ஒன்றியத்துக்குள்பட்ட ரகுநாதபுரம், பெரியபட்டணம், வண்ணாங்குண்டு, குத்துக்கல்வலசை, திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, மாயாகுளம், குளபதம், களரி, மல்லல், உத்திரகோஷமங்கை கிராமங்களில் வேட்பாளா் ஜெயபெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். முன்னாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மன்னாா் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 264-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன், மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி, ஒன்றியச் செயலா் ஆட்.ஜி.மருதுபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com