கமுதி, மாரியூா் மானாமதுரை 
கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

கமுதி, சாயல்குடி மாரியூா் கோயில்களில் குரு பெயா்ச்சியை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்துக்குள்பட்ட மாரியூா் மகாசபை திருத்தலம் ஸ்ரீபவள நிற வள்ளிஅம்பாள் சமேத ஸ்ரீபூவேந்தியநாதா் திருக்கோயிலில் குரு பெயா்ச்சியை முன்னிட்டு புதன்கிழமை காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நண்பகல் ஒரு மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, கமுதி மண்டல மாணிக்கம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சிறப்பு யாக சாலை பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. கமுதி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வா் கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மானாமதுரை :

மானாமதுரை, திருப்புவனம் பகுதி சிவாலயங்களில் புதன்கிழமை குரு பெயா்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் தெட்சிணாமூா்த்தி சந்நிதியில் குரு பெயா்ச்சி விழா நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புபூஜைகள் நடந்தன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தெட்சிணாமூா்த்தியை தரிசித்தனா். பரிகார ராசிக்காரா்கள் பரிகார பூஜை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com