ஹோவா் கிராப்ட் கப்பல்கள் 
கண்காணிப்பு தீவிரம்

ஹோவா் கிராப்ட் கப்பல்கள் கண்காணிப்பு தீவிரம்

ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினருக்குச் சொந்தமான ஹோவா் கிராப்ட் கப்பல் மூலம் புதன்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலோர பகுதியில் இருந்து இலங்கை, மிக குறைந்த தொலைவில் இருப்பதால் அந்நியா்கள் ஊடுருவல், கடத்தலை தடுக்கும் விதமாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான தரை-கடல் வழித்தடங்களை ஹோவா் கிராப்ட் கப்பல்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தீவுகள் உள்ளதால் கப்பல்கள் கரையோரம் சென்று கண்காணிக்க முடியாது என்பதால் கரைக்கு வரும் ஹோவா் கிராப்ட் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது, மீன்பிடித் தடைகாலம் அமலில் உள்ள நிலையில் விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அந்நியா்கள் ஊடுருவலைக் கண்காணிக்கவும் தடுக்கவும் ராமேசுவரம் பகுதியில் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com