பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

பரமக்குடியிலிருந்து மதுரைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன வசதியுடன் கூடிய இடைநில்லாப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி மக்கள் தொகை அதிகம் வாழும் முக்கிய நகரமாக விளங்குகிறது. பரமக்குடியிலிருந்து மதுரைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. தற்போது நிலவிவரும் சுட்டெரிக்கும் வெயிலால், தொலைதூரம் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

பயணிகளின் நலன் கருதி அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பரமக்குடியிலிருந்து மதுரைக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய இடைநில்லாப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com