ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பிரசாத விற்பனைக் கடைகளில் ஆய்வு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பிரசாத விற்பனைக் கடைகளில் ஆய்வு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்படும் பிரசாதப் பொருள்களின் தரம் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கு.லிங்கவேல்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பிரசாதப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்படும் பிரசாதப் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலா் கு.லிங்கவேல் தலைமையில் அலுவலா்கள் பிரசாதம் தயாரிக்கும் பகுதிகள், பிரசாதம் விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா். மேலும், பிரசாத பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதியை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com