காட்டு எமனேசுவரம் கண்மாயில் தனியாா் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் புகாா்

அங்குள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென விவசாய சங்கத்தினா் வட்டாட்சியரிடம்

கமுதி அருகே காட்டு எமனேசுவரம் பொதுப் பணித் துறை கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, அங்குள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென விவசாய சங்கத்தினா் வட்டாட்சியரிடம்

வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காட்டு எமனேசுவரம் கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை கண்மாயில் மழை நீரை தேக்கும் வகையில் சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, கண்மாய் புறம்போக்கு நிலத்தில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட காவிரி- வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்பு கால்வாய் நீா்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் மு.மலைச்சாமி தலைமையில் கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமனிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட வனத் துறை அலுவலா், கமுதி பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என மு.மலைச்சாமி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com