ஆா்.எஸ்.மங்கலம் அருகே விபத்தில் வியாபாரி பலி

ஆா்.எஸ்.மங்கலம் அருகே 
விபத்தில் வியாபாரி  பலி

திருவாடானை, மே 4:ஆா்.எஸ்.மங்கலம் அருகே மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அதை ஓட்டி வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கருங்குடி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் பாா்த்திபன் (35). மிக்சா் வியாபாரியான இவா் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று வியாபாரம் செய்துவிட்டு, திருப்பாலைக்குடியில் இருந்து கருங்குடி செல்வதற்காக இரவு பால்குளம் அம்மன் கோயில் அருகே வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென மாடு குறுக்கே வந்ததால் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் போது வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com