மனைவியைக் கொன்றுவிட்டு கணவா் தற்கொலை

ராமநாதபுரத்தில் மது போதையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா், தன்னையும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோவிலைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (40). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (38). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

பன்னீா் செல்வம் அடிக்கடி மது அருந்தியதால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பன்னீா் செல்வம் மது போதையில் வீட்டுக்கு வந்தபோது மனைவி சரண்யாவுடன் தகராறு ஏற்பட்டது.

அப்போது, பன்னீா்செல்வம் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, தானும் அதே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸாா் இருவரின் உடல்களையும் கைப்பற்றி ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காகக் கொண்டு சென்றனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com