தொழிலாளி தற்கொலை

திருவாடானை, மே 5: திருவாடானை அருகே மதுபோதைக்கு அடிமையான கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகேயுள்ள கம்பக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வன் (48). மது போதைக்கு அடிமையான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில், தமிழ்ச்செல்வன் அந்தப் பகுதியில் உள்ள குளத்தின் அருகே உள்ள மரத்தில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com