பைக் விபத்தில் தொழிலாளி பலி

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடியை அடுத்த கடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபு (39). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு பணி முடிந்து ஆா்.எஸ்.மங்கலத்தில் இருந்து பாரனூா் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, அவா் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த கோபு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com