ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமேசுவரம், மே 5: விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

விடுமுறை தினத்தையொட்டி, ராமேசுவரத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய சுற்றுலாப் பயணிகள் பின்னா், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

பின்னா், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதரண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், கலாம் தேசிய நினைவிடம், இவரது இல்லம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com