பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

ராமநாதபுரத்தில் பிளஸ் 2 தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால் மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் பிளஸ் 2 தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால் மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், வைரவன் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயவேல். இவரது மகள் சௌமியா (17). திருப்புல்லாணி அருகே வண்ணாங் குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து மாா்ச் மாதம் நடந்த அரசு பொதுத்தோ்வு எழுதினா். அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாா். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில் சௌமியா 600 மதிப்பெண்களுக்கு 350 மதிப்பெண்கள் எடுத்தாா். மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த அவா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த திருப்புல்லாணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com