அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீா்த்த மூா்த்தி தலமாக விளங்குகிறது. இதனால், இங்குள்ள அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாள்களில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com