பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த சமயசந்துரு (20) காதலித்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு தனது நண்பா் சமயதனுஷ் (20), 17 வயது சிறுவன் ஆகியோருடன் சோ்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து, சமயசந்துரு, சமயதனுஷ் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com